கர்ப்பமானது தனக்கே தெரியாது என்கிறார் ஏமி ஜாக்சன்

Amy Jackson

நடிகை ஏமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியிருப்பதாக அவரே அறிவித்திருந்த நிலையில், தான் கர்ப்பமானது தனக்கே தெரியாது என்று கூறியிருக்கிறார்.

நடிகை ஏமி ஜாக்சன் லண்டன் கோடீஸ்வர தொழில் அதிபர் ஜார்ஜ் பனயியோட்டோவை நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நிலையில், விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏமி ஜாக்சன் தனது இணையதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். திருமணம் ஆகாத நிலையில் ஏமி ஜாக்சன் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்ததை கண்டு ரசிர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தற்போது அதையும் மீறி மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியிட்டு இருக்கிறார். அதில்,’நான் கர்ப்பமாக இருப்பது எனக்கே 6 வாரங்களுக்கு தெரியாது. அதன்பிறகு தான் கர்ப்பமாக இருக்கும் வி‌ஷயம் தெரிந்தது.

இந்த வி‌ஷயம் தெரிந்தவுடன் அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறேன். மேலும் நான் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் சுற்றி வருகிறேன். மகனோ அல்லது மகளோ பிறந்தால் என்னுடன் உலகை சுற்றுவார்கள்’ என்று வேறு கூறி இருக்கிறார்.