சிவகார்த்திகேயனுடன் இணையும் பாரதிராஜா

SK 16

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் எஸ்.கே.16 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா இணைகிறார்..

சின்னத்திரையில் வெற்றிகரமாக வலம் வந்த சிவகார்த்திகேயனை மெரீனா படம் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் பாண்டிராஜ்.

மெரினா திரைப்படத்தைத் தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் இந்த கூட்டணி இணைந்தது. இந்நிலையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாரதிராஜா ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்நிலையில் பாரதிராஜா, சுசீந்திரன் இயக்கிவரும் ‘கென்னடி கிளப்’ படத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.