ரசிகர்கள் தான் பக்கபலம் என்கிறார் பிக் பாஸ் ஓவியா

Oviya

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் `காஞ்சனா 3’ திரைப்படத்தில் நடித்துள்ள ஓவியா, ரசிகர்கள் தனக்கு பக்கபலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் மூலம் ஓவியா ஏற்பட்ட புகழை 90 எம்.எல் படத்தில் நடித்ததன் மூலம் தனது பெயரை கெடுத்துக் கொண்டார்.

எனவே ஓவியா தனது இமேஜை காஞ்சனா 3 படம் தான் மீண்டும் பெற்றுத்தரும் என நம்பி எதிர்பார்த்துள்ளார்.
இதுகுறித்து ஊடகம் ஒன்றிக்கு கருத்து தெரிவித்த அவர் ’எனக்கு எந்த பிரச்சினை இருந்தாலும், என் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எனக்கு பக்கபலமாக இருந்துள்ளார்கள். என்னோட அடுத்த படமான ‘காஞ்சனா 3’ மற்றும் ‘களவாணி 2’ படத்துல வர்ற கதாபாத்திரம் முற்றிலும் வேறமாதிரி இருக்கும்’ என்று கூறியுள்ளார்.