நாளை தொடங்குகிறது முதல் கட்ட தேர்தல்

முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 20 மாநிலங்களின் 91 பாராளுமன்ற தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது. இந்த தொகுதிகளிலும், 4 மாநில சட்டசபை தொகுதிகளிலும் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ந்தேதி (நாளை) தொடங்கி அடுத்த மாதம் 19-ந்தேதி வரை 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், 20 மாநிலங்களில் நாளை முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட தேர்தலை நாளை சந்திக்கிற முக்கிய தலைவர்களில் உத்தரபிரதேசத்தில் இருந்து போட்டியிடும் மத்திய மந்திரிகள் வி.கே. சிங் (காசியாபாத்), மகேஷ் சர்மா (நொய்டா), சத்யபால் சிங் (பாக்பத்), ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சி தலைவர் அஜித் சிங் (முசாப்பர்நகர்) , மராட்டிய மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற தலைவர்களில் மத்திய மந்திரி நிதின் கட்காரி (நாக்பூர்), முன்னாள் மத்திய மந்திரியும் காங்கிரஸ் தலைவருமான சுஷில்குமார் ஷிண்டே (சோலாப்பூர்) முக்கியமானவர்கள்.

91 பாராளுமன்ற தொகுதிகளிலும், 4 சட்டசபை தேர்தல்களிலும் அனல்பறக்கும் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.