மீண்டும் மோடியை முதல்வராக்குவோம் – பிரசாரத்தில் உளறிய கஞ்சா கருப்பு

நடிகர் கஞ்சா கருப்பு திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய கஞ்சா கருப்பு : மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக்குவோம் என்று கூறுவதற்குப் பதிலாக மீண்டும் மோடியை முதல்வராக்குவோம் என்று கூறினார். அதைக்கேட்டு அனைவரும் சிரித்தனர். இது அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் பா.ம.க. வினருக்கு அவமானத்தை உண்டாக்கியுள்ளது.

மேலும் மத்திய அரசு வழங்கிய திட்டங்களை மாநில அரசு செய்ததாகவும் கூறினார்.

ஏற்கனவே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பாமக வேட்பாளரை ஆதரித்துப் பேசும் போது ஆப்பிள் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று கூறியிருந்தமை தெரிந்ததுவே.