கால்நடைத்தீவன ஊழல் – லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனு தள்ளுபடி

ராஷ்டிரீய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லாலுபிரசாத் யாதவ், 4 கால்நடைத்தீவன ஊழல் வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்றுள்ள நிலையில், ராஞ்சியில் உள்ள சிறையில் உள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே ஒரு வழக்கில் அவர் ஜாமீன் பெற்றவர், மீதி 3 வழக்குகளில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரை ஜாமீனில் விடுவித்தால், அரசியல் பணிகளில் ஈடுபடுவார் என்று கூறி, அதற்கு கடும் சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்தது.

அதனையடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு நேற்று லாலுவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

தான் 24 மாதங்கள் ஜெயிலில் இருந்திருப்பதாக லாலு கூறியதை ஏற்ககாத நீதிபதிகள் “14 ஆண்டு சிறைத்தண்டனையுடன் ஒப்பிடுகையில், 24 மாதங்கள் என்பது ஒன்றுமே இல்லை” என்று அவர்கள் கூறினர்.

இதனால் நாடாளுமன்ற தேர்தலில் லாலு பிரசாரம் செய்ய முடியாதநிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.