திருமணம் செய்து கொண்ட மூடர் கூடம் நவீன்

மூடர் கூடம் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகரும், இயக்குனருமான நவீன், சிந்து என்பவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

‘மூடர் கூடம்’ திரைப்படத்தை தொடர்ந்து ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். இதில், நவீனுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இயக்குனர் நவீன் சிந்து என்ற பெண்ணை திடீர் பதிவு திருமணம் செய்துக் கொண்டுள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

திருமணம் செய்து கொண்ட மூடர் கூடம் நவீன்