அமிதாப் பச்சனுக்கு ஜோடியாகும் ரம்யா கிருஷ்ணன்

தமிழ்வாணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகும் `உயர்ந்த மனிதன்’ படத்தில் அமிதாப் பச்சன் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தமாகி உள்ளார்.

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முதல்முறையாக எஸ்.சூர்யாவுடன் இணைந்து நேரடி தமிழ்ப்படத்தில் நடித்து வருகின்றமை தெரிந்ததுவே.

இப்போது அமிதாப் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாக கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன.
ரம்யா கிருஷ்ணன் ஏற்கனவே அமிதாப் பச்சனுடன் இணைந்து ஒரு இந்தி படத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.