பிரபுதேவா இயக்கத்தில் மீண்டும் களமிறங்கும் சல்மான் கான்

Dabangg 3

‘வாண்டட்’ திரைப்படத்துக்கு அடுத்து சல்மான் கான் நடிப்பில் உருவாகும் தபாங் படத்தின் மூன்றாம் பாகத்தை பிரபு தேவா இயக்கவுள்ளார்.

தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி ஆகிய படங்களை இயக்கி உள்ள பிரபு தேவா, போக்கிரி படத்தை இந்தியில் சல்மான் கான் நடிக்க ‘வாண்டட்’ என்ற பெயரில் இயக்கியிருந்தார்.

தொடர்ந்து அக்‌ஷய்குமார் நடித்த ரவுடி ரத்தோர், அஜய்தேவ்கன் நடித்த ‘ஆக்‌ஷன் ஜாக்சன்’ மற்றும் ராமையா வாஸ்தாவையா, ஆர்.ராஜ்குமார், சிங் இஸ் பிளிங் ஆகிய படங்களை இயக்கி இந்தி பட உலகிலும் முன்னணி இயக்குனராக வளம் வருகிறார் நம்ம பிரபு தேவா.

இந்நிலையில் மீண்டும் சல்மான் கான் நடிக்கும் புதிய படத்தை பிரபுதேவா இயக்கவுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தொடங்கி உள்ளது. இதனை சல்மான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். சல்மான் கான் ஜோடியாக சோனாக்சி சின்ஹா நடிக்கிறார்.