சூர்யாவின் NGK படம் கன்னட வியாபாரம்

NGK Updates

செல்வராகவனின் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் NGK படம் வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட 1 ஆண்டிற்கும் மேலாக படப்பிடிப்பில் இருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி மே 31 என்பதை சமீபத்தில் உறுதி செய்திருந்தனர்.

இதனால் இப்படத்தின் திரையரங்கு உரிமைகளை விற்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.

தற்போது சூர்யாவின் NGK படத்தின் கன்னட திரையரங்கு உரிமையை மட்டும் ரூபாய் 3.33 கோடிக்கு தீராஜ் எண்டர்ப்ரைசஸ் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான காப்பானும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.